கல்முனை திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலியானது 28.07.2024 அன்று இயேசு சபை மேலாளர் அருட்பணி சகாயநாதன் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜெயக்காந்தன் அடிகளாரும் அருட்பணி அம்புறோஸ் அடிகளாரும்; இணைந்து திருப்பலியினை சிறப்பித்தனர். பல பங்குகளிலிருந்தும் இறைமக்கள் வருகை தந்திருந்தர். திரு இருதநாதர் திருச்சுருப பவனி இறுதியாக ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுற்றது.