June 30, 2024

தாண்டவன்வெளி. காணிக்கை அன்னை ஆலய மறைக்கல்வி பாடசாலையானது புதுப்பொலிவுடன் நிர்மாணம் செய்யப்பட்டு 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தாண்டவன்வெளி. காணிக்கை அன்னை ஆலய மறைக்கல்வி பாடசாலையானது புதுப்பொலிவுடன் நிர்மாணம் செய்யப்பட்டு 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை ரி.ஏ,யூலியன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை.எ,எ,நவரெட்ணம் அடிகளார். அருட்தந்தை.பிரைனர் செலர் அடிகளார். அருட்தந்தை.லோரன்ஸ் அடிகளார் மற்றும் அருட்சகோதரிகள். பெற்றோர்கள். இறைமக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களினால் கிறிஸ்துவின் வாழ்வை மையப்படுத்தி வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் பற்றி அதிதிகளுக்கு மாணவர்களால் தெளிவூட்டப்பட்டது. நிகழ்வின் போது சிரேஸ்ட மறைக்கல்வி ஆசிரியர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டதுடன் அரச அதிபர் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் கையளிக்கப்பட்டது.