“மனித உரிமைகளுக்காக எழுவோம்” மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகமும், இலங்கை தேசிய சமாதானப் பேரவையும் இணைந்து சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கடந்த 16.12.2019 அன்று சிறப்பாக நினைவுகூர்ந்தது. நிறுவக இயக்குனர் அருட்தந்தை G.அலக்ஸ் றொபட் அவர்கள் நிகழ்விற்கு தலைமைதாங்கினார். பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறைமாட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. பிரசாந்தன் அவர்களும், இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிருவாக ஆலோசகர் திருமதி. சுமாது பெரேரா அவர்களும், இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் பொருளாளரும் முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தருமாகிய திரு. T. ஜெயசிங்கம் அவர்களும் நிகழ்வினை சிறப்புறச் செய்தனர். மேலும் சர்வமதத் தலைவர்களும், அரச அரச சார்பற்ற நிறுவக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்திருந்தனர். நிகழ்வின் சிறப்பம்சமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து சமாதான பவனி ஆரம்பித்து மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தை வந்தடைந்து பின்னர் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஜனாப். A.C.A. அஸீஸ் அவர்கள் உரையாற்றினார். கலைநிகழ்வுகளும், சிறப்புரைகளும் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் அதிதிகளுக்கும் நிறுவகத்துர்டன் இணைந்து செயற்படும் குழுக்கழுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டது.