நேற்று ஆயித்தியமலை சதாசகாய அன்னை திருத்தல யாத்திரை பெருவிழா வருடாந்த பொதுகூட்டமானது மட்டு அரசாங்க அதிபர் தலைமையில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.இதில் மட்டு ஆயர்,அரசாங்க அதிபர்,கிறிஸ்தவ மத வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் ,மண்முனை மேற்கு பிரதேச செயலாளர், ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் திணைக்களங்கள் கலந்து கொண்டனர். பாதயாத்திரை தொடர்பாகவும் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம்,குடிநீர்,போக்குவரத்து,வைத்திய உதவிகள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.