ஆயித்தியமலை சதாசகாய அன்னை திருத்தலத்திற்குற்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டையில் என்னும் கிராமத்தில் முப்பது வருடத்திற்கு முன் யுத்தத்தினால் சேதமைடைந்த புனித அந்தோணியார் ஆலயத்தினை புதிதாக அமைப்தற்காக இன்று காலை அடிக்கல் நடப்பட்டது.இந் நிகழ்வில் மட்டு மறைமாவட்ட ஆயர்,மட்டு அரசாங்க அதிபர்,மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர், ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதாகாரி,உன்னிச்சை இராணுவ தளபதி,பிரதேச சபை உறுப்பினர், மற்றும் இறை மக்களும் கலந்து கொண்டனர்.