ஓஸானம் நிலையத்தின் வருடாந்த ஒளி விழா 2018
ஓஸானம் குழந்தைகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் இன்னுமொரு நிகழ்வாக 02.12.2018 ஞாயிற்றுக் கிழமை, அதாவது நேற்றைய தினம் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெற்ற வருடாந்த ஒளிவிழா அமைந்தது. ஓஸானம் குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களைப் பராமரிக்கின்ற, கற்பிக்கின்ற உதவியாளர்கள் மற்றும் ஆசிரியைகளினதும் ஆற்றல் இருப்புக்களையும் அது வெளிக் கொணர்ந்தது.
ஓஸானம் நிலையத்தின் காப்பாளர் - மட்டக்களப்பு ஆயர் மேதகு ஜோசப் பொன்னையா ஆண்டகை பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த இந்த ஒளி விழாவில் பல குருக்கள், அருட் சகோதர சகோதரிகள், சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி திரு. அருள்மொழி, பொலிஸ் அதிகாரிகள், பெருமளவான பெற்றோர்கள், ஆதரவாளர்கள் இன்னும் தூய வின்சன்ட் டி போல் சபை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
சரியாக 03.15 க்கு ஆரம்பமான நிகழ்வு 04.15 மணிக்கு நிறைவு பெற்றது. நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நத்தார் கால அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அனைத்து ஏற்பாடுகளையும் ஓஸானம் நிருவாகியான அருட் சகோதரி நிலானி அவர்களின் மேற்பார்வையில் நடந்து முடிந்தன.
THE ANNUAL CHRISTMAS PROGRAM OF THE OZANAM CENTER
The Annual Christmas Program – The ‘Oli vizha’, another program to exhibit the talents of the Ozanam Children tool place yesterday that is 02.12.2018 Sunday at the Ozanam Center at 03.00 P.M. It also brought to the light the hidden talents of the helpers and teachers of the center.
Rt. Rev. Joseph Ponniah – the Bishop of Batticaloa and the patron of the Ozanam Center Officiated the event as the chief guest. Many Rev. Fathers, Brothers and Sisters< the Social Service Officer, Batticaloa Mr. Arulmoli, Police officers, supporters, parents, members of the Society of St. Vincent de Paul were present.
The program started at 03.15 and ended at 04.15 in the evening to the entire satisfaction of the attendees. The Christmas gifts to the Ozanam Children and the staff of the Center were awarded by the guests.
The entire arrangements for the event were carried out under the supervision of the Administrator of the Ozanam Center Rev. Sr. Nilani.