July 13, 2018

The feast of our Lady of Rosa Mystica.

ரோசா மிஸ்டிக்கா மரியன்னையின் திருநாள் சிறப்பு

நேற்றைய தினம் ரோசா மிஸ்டிக்கா மரியன்னையின் (13.08.2018 - வெள்ளிக்கிழமை) திருநாள் சத்துருக்கொண்டான், ஓஸானம் நிலையத்தில் ரோசா மிஸ்டிக்கா கன்னியர் சபையால் சிறப்பிக்கப்பட்டது.

ரோசா மிஸ்டிக்கா கன்னியர் சபையின் ஸ்தாபகரான மட்டக்களப்பு ஆயர் மேதகு பொன்னையா யோசப் ஆண்டகை திருநாள் கூட்டுத் திருப்பலியை தமது உடன் குருக்களான அருட்பணியாளர்கள் தேவதாசன், இக்னேசியஸ் யோசப், சாந்தான் இம்மானுவல், சீ. வி. அன்னதாஸ், ஜே. ஏ. ஜீ. ரெட்ணகுமார், சாம்சன் அடிகளார்களுடன் இணைந்து ஒப்புக் கொடுத்தர்.
அன்னையின் பல பக்தர்களும் ,அருட் சகோதரிகளும் நேற்றைய நிகழ்வகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.

திருப்பலியை அடுத்து வருகை தந்திருந்த அனைவருக்கும், ஓஸானம் குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

FEAST OF OUR LADY OF ROSA MYSTICA

The feast of our Lady of Rosa Mystica was celebrated by the sisters of the Rosa Mystica at the Rosa Mystica Chapel at Ozanam Center, Saththurukondan.

The founder of the Rosa Mystica order, The Bishop of Batticaloa Rt. Rev. Joseph Ponniah Concelebrated the feast mass. Rev. Fathers, A. Thevathasan, Ignatius Joseph. Santhaan Emmanuel, C. V. Annadas, J.A.G. Retnakumar joined the Bishop in the Eucharistic celebration. Many devotees of Our Lady and Rev. Sisters were attending the celebrations yesterday.

Following the Mass, breakfast was provided to all all dignitaries and to the Ozanam Children attending the celebration.