புளியந்தீவு மரியன்னை பேராலய மரியாயின் சேனையினரின் 70ஆம் ஆண்டு நிறைவு விஷேட திருப்பலி மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இன்று காலை 07.00 மணிக்கு நடைபெற்றது .பங்குத்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அடிகளாருடன் ,அருட்தந்தை அம்புரோஸ் அடிகளாரும் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .மரியாயின் சேனை அங்கத்தவர்கள்,மற்றும் ஏனைய பங்கு மரியாயின் சேனை அங்கத்தவர்கள்,துறவற சபையோர் ,இறைமக்கள் என பலர் இத்திருப்பலியில் கலந்துகொண்டு செபித்து புளியந்தீவு மரியன்னை பேராலய மரியாயின் சேனை அங்கத்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.