"தவக்காலத்தின் வாசலில்" மட்டக்களப்பு மறைமாவட்ட அருங்கொடை....
மட்டக்களப்பு மறைமாவட்ட அருங்கொடை பணியகத்தினால் தவக்காலத்தினை முன்னிட்டு தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் "தவக்காலத்தின் வாசலில்"எனும் மாபெரும் குணமளிக்கும் வழிபாடு 15.02.2018 மாலை முதலாம் நாள் இடம்பெற்றது. இந்தியா, டிவைன் தியான இல்லத்தினைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் அகஸ்டின் முண்டேகாட், றபாயல் ஆகியோர் வழிநடத்தினர். 16ம் 17ம் திகதிகளிலும் இடம்பெறும். முதல்நாள் நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் அதிவந்.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் கலந்துகொண்டு தமது ஆசிச்செய்தியினை வழங்கினார்.