கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசக மாத ஆலய 62 வது வருடாந்த திருவிழா கடந்த 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
புனித மாதாவின் இறுதி திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து 03.09.2016 சனிக்கிழமை காலை 5.30 க்கு ஆயர் பேரருட் யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஆரம்பமாகி வவுணதீவு ஊடாக சென்றது.
பாதயாத்திரையினருக்கு வருடந்தோறும் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் கிளிர்பானம் வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் இவ் வருடமும் வழங்கப்பட்டது.
இதில் 3000 பாதயாத்திரியர்களுக்கு அன்னதானமாக உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. வவுணதீவு ஊடாக இடம்பெற்ற இவ் யாத்திரையில் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவ் ஆலயத்திற்கான யாத்திரை செங்கலடியில் இருந்து ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் இடம்பெற்றமை குறிப்புடத்தக்கது.