May 12, 2016

பாராட்டி வாழ்த்துகின்றோம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களே இலங்கை தேசிய கபடி அணியில் இணைக்கப்பட்டு இலங்கையின் வெற்றிக்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
ஈரானில் நடைபெற்ற கபடிச்சுற்றுப்போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றி மூன்றாடம் இடம் பெற்று வெற்றிக்கு பங்காற்றிய மட்டக்களப்பினை சேர்ந்த இரண்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.மங்களச்சந்திரா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.