மட்டக்களப்புÂ Â பெரியÂ புல்லுமலை புதுமைமிகுÂ புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் Â வைகாசித் திருவிழா, மற்றும் புதிய ஆலய திறப்புவிழா இன்று(22)Â மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப்பொன்னையா ஆண்டகை அவர்களினால் கொடியேற்றத்துடன் புதிய ஆலயமும் திறந்து வைக்கப்பட்டது.Â
மட்டக்களப்பின் அனைத்துப் பங்குகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.Â
ஆலய திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும்Â Â 29ஆம் திகதி Â வெள்ளிக்கிழமை மாலைÂ 03.30Â மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து அன்னையின் திருத்தலத்தை நோக்கிÂ Â விசேட திருச்சுருபÂ பவனியுடன்மாபெரும் பாதயாத்திரை இடம்பெறவுள்ளது .
30Â சனிக்கிழமை மாலைÂ 05.00Â மணிக்குÂ புனித செபமாலை அன்னை திருத்தலத்தில் அன்னையின்திருச்சுருப பவனியும் தொடர்ந்து விசேட நற்கருணை ஆராதனையுடன் திருப்பலி இடம்பெறும்.
புனித செபமாலை அன்னையின் திருத்தல திருவிழா திருப்பலிÂ மே மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமைÂ காலைÂ 07.15Â மணிக்கும்Â மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்.
மேலும் இவ் ஆலயம் குறுகிய சில காலப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமாகும். இதற்கு மக்கள் உதவியுடனும் மற்றும் பெருமுதவியை மட்டக்களப்பு திரு.டேவிட்Â குடும்பம் கொடுத்துதவியமை குறிப்பிடத்தக்கதாகும்.