தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வித்தியாலய அதிபர் திரு.S.மங்களச்சந்திரா தலைமையில் இன்று(18) வியாழக்கிழமை இடம்பெற்றது.
அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய, பாடசாலை, இல்ல கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய, பாடசாலை கீதம் என்பனவும் இசைக்கப்பட்டது. மாணவர்களினால் ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணம், மூன்று இல்லங்களினதும் அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், குறுந்தூர ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள், பழைய மாணவர்கள், இல்ல ஆசிரியர்களுக்கான ஓட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (அமல்) பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக முன்னால் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R.மாணிக்கராஜா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.M.பாலசுப்ரமணியம் உதவி உடற்கல்விப் பணிப்பாளர் திரு.V.லவக்குமார் மற்றும் அருட்தந்தை அன்ரனிராஜ் மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டனர்.
மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.