மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் நலன் கருதி புதுவருடத்தை வரவேற்கும் ஆராதனை இன்று வெள்ளிக்கிழமை (01.01.2016) சிறைச்சாலையில் நடைபெற்றது.
சிறைக் கைதிகளும் மனிதர்களே தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த குற்றங்களுக்காக சிறைச்சாலையில் சிறை வாசம் அனுபவித்துக் கொண்டிருப்போரின் பாவங்களைப் போக்கி புது வருடத்தின் புதிய சிந்தனையுடன் சமூகத்தில் மிளிர வேண்டும் என்பதற்காக ஆராதனை இடம்பெறுவதாக மட்டக்களப்பு மறை மாவட்ட அயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட ஆராதனையின் போது காணிக்கைகள் வழங்கப்பட்டதோடு கைதிகளுக்கு சப்பிரசாதம் வழங்கப்பட்டது.
இறுதியில் கைதிகளுக்காக புதுவருட சிற்றூண்டிகள் சிறைச்சாலையின் அத்திட்சகர் எம்.எல். அக்பரினால் வழங்கப்பட்டன.