January 1, 2016

புனித மரியாள் பேராலயத்தில் புதுவருட பிறப்பு

புத்தாண்டு 2016 ஐ வரவேற்கும் புதுவருடப் பிறப்பு நள்ளிரவு ஆராதனை இன்று வெள்ளிக்கிழமை (01.01.2016) புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டில் இடம்பெற்ற பாவங்களுக்கு விமோசனம் வேண்டியும் பெற்ற நன்மைகளுக்கு நன்றி தெரிவித்தும் பிறக்கப்போகும் புதிய ஆண்டில் புத்துணர்ச்சி மற்றும் புதிய சிந்தனைகள் ஏற்பட வேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா கூட்டுத் திருப்பலியின் போது வேண்டினார்.

கலந்து கொண்டவர்களால் பேராலயத்திற்கு பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு ஆராதனையின்போது அடியார்களுக்கு சப்பிரசாதம் வழங்கப்பட்டது.

கூட்டுத் திருப்பலியை பேராலயத்தின் பங்குத் தந்தையும் மறை மாவட்ட குருமுதல்வருமான ஆருட்தந்தை ஏ. தேவதாசன் மற்றும் உதவிப் பங்குத் தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட் ஆகியோர் ஒப்புக் கொடுத்தனர்.