தேசிய பாதுகாப்பு தினமான இன்று 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரலையில் உயிரிழந்தோருக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது இன்று காலை செங்கலடி புனித நிக்கொலாஸ் தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை G.மகிமைதாஸ் தலைமையில் இடம் பெற்றது.
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆலயத்தில் ஆராதணைகள் இடம் பெற்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி சுடர் ஏற்றப்பட்டது.