)
சுனாமிப் பேரலையினால் உயிர்நீத்த உறவுகளின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நாவலடி டச்பார் திருச்செந்தூர் பகுதிகளில் இன்று காலை உயிரிழந்த உறவுகளினால் நினைவு கூரப்பட்டது.
 இந்நாசியார் ஆலயப் பங்குத் தந்தை நவாஜி தலைமையில் ஆத்மா சாந்தி வேண்டி இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு டச்பார் நினைவுத்தூபிக்கருகில் இடம்பெற்றது.
இதேவேளை சுனாமிப் பேரலையினால் உயிர்நீத்த உறவுகளின் 11ம் ஆண்டு பிரதான நிகழ்வு மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருச்செந்தூர் நினைவுத் தூபிக்கருகல் இடம்பெற்றது. இவ்அஞ்சலி நிகழ்வில்அரசியல்ப் பிரமுகர்களும் உறவினர்களும்
கலந்து கொண்டனர்