கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்ட இளைஞர் ஒன்றியத்தினால் ஒளி விழா இன்று (12) தன்னாமுனை கத்தோலிக்க மறை மாவட்ட மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கலாநிதி பொன்னையா ஜோசப் மற்றும் நிகழ்வுக்கு வருகை தந்த அருட் தந்தையர்களையும் மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் யுவதிகளினால் மலர் மாலைஅணிவித்து அழைத்து வரப்பட்டனர்.
ஒளிவிழா நிகழ்வில் மட்டக்களப்பு ,கல்முனை ,அம்பாறை ,அக்கரைப்பற்றுஆகிய பிராந்திய மறை கோட்ட பங்குகளான அக்கரைப்பற்று ,கல்முனை,சொறிக்கல்முனை ,அம்பாறை ,ஆயித்தியமலை,தன்னாமுனை ,செங்கலடி,தேற்றாத்தீவு ,காந்திகிராமம் ,இருதயபுரம், புளியந்தீவு ,சகாயபுரம் ,கருவப்பங்கேணி ,பாலமீன்மடு ,திருப்பெருந்துறை ,பனிச்சையடி ,தாளங்குடாஆகிய இளைஞர் யுவதிகளின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு, கல்முனை ,அம்பாறை ஆகிய பிராந்திய மறைகோட்ட அருட் தந்தையர்களும் , அருட்சகோதரிகள் , மற்றும் கததோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் இளைஞர் யுவதிகள் ஆகியோர் ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.