மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து மறை கோட்ட பங்கு இளைஞர்கள் நடாத்திய “ உங்களின் ஒரு துளி இரத்தம் ஒரு உயிரைக் காப்பாற்றும் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று காலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .
போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் இந்த நிகழ்வு முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் இன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது .
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் . எஸ் . டப்ளியு .பி எ. எ. தமயந்தி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மறை கோட்ட கத்தோலிக்க இளைஞர் , யுவதிகளுடன் ஏனைய மத இளைஞர், யுவதிகளும் இன்று இடம்பெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டனர்.